Saturday, January 2, 2010

மறப்பதும் மன்னிப்பதும்

மறப்பதும் மன்னிப்பதும்
மனிதநேயம் என்றோம்!
நாங்கள் கூறியது தவறை,
நீங்கள் மன்னித்து
மறந்துபோனது மனிதனை!!
-குட்டி

மனிதநேயம்


மனிதநேயம் மரத்துப்போன மனிதமும்
மனித நேயம் மறந்து போன மனிதனும்
பொறாமை மிகுந்து போன கூட்டமும்
பொறுமை இழந்து போன தலைவனும்
எந்நாட்டின் சொத்தெனில் யாரிவர்கள்
மடமையை பறித்தெடுத்து காட்டுவர்?

சிறான் முதற் கிழாற் வரை
சுயநலமெனும் சூழ்ச்சியே மூச்சு எனில்
சிற்றெறும்பை காப்பாற்றும் சிறந்தானை
சல்லடையாய் சலித்தாலும் சந்தர்ப்ப
சூழ்நிழையால் சந்திப்பேனா? இது ஒரு சாபக்கேடா?

மடமை போற்றும் களைகளினுள்
மனிதமொன்று கண்டேன் குற்றுயிறும் குழையுயிறுமாய்
மண்ணைவிற்று பொன்னை விற்று என்
மனதின் மனிதநேயம் காப்பாற்றுவேன்!
அட நண்பரே! அது உன்னுள்ளும் அதே நிலையில்!
அடை காக்கும் கோழியாய் உயிரிட்டு காப்பாயா?
உன் சந்ததிக்கும் அதை காட்டிடுவோம்!
வரலாற்று சின்னமாய்!
                -        குட்டி