லட்சியம் - சிறுகதை-குட்டி
செந்தில் ஒரு பழமையின் ரசிகன், பழமைவாதி. எப்போதும் மிக பழைய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பவன்.
அவனிடம் ஒரு நல்ல கார் இருந்தும் வழக்கம் போல் ஒரு மிக பழைய கயலான் கடை காரை அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டான். அது பிரச்சனை இல்லாமல் ஓட வாங்கிய விலையை விட இருமடங்கு செலவு செய்தான். அவனது நண்பர்கள் அவனது காரை ஓட்டி பார்க்க வாங்கிய போது வெளியில் நின்றதில் பட்ட குறை, புகை சிறிது அதிகமாகவே வந்தது.
காற்றை மாசு படுத்துகிறோமோ? என மெக்கானிக்கிடம் கேட்ட போது அவர் கூறிய பதில் என்னவோ செய்து விட்டது "நீங்கள் ஒருவர் மட்டும் இதை யோசித்து பிரயோசனமில்ல மற்றவர்களும் இத யோசிக்கனும், ஏன் நீங்க உபயோகிக்கிற கம்பியூட்டர், ஏ.சி, பேன், லைட் கூடத்தான் உலகம் மாசு பட்டதுக்கு காரணம்னு சொல்றாங்க.இந்த பழய காரை நீங்க எப்போவாவது தான் உபயோகிக்க போறீங்க ஆனா பேன், லைட், ஏ.சி, கம்ப்யூட்டர் தினமும் உபயோகிக்க போறீங்க, அத மொதல்ல கொறங்க தம்பி." உலக வெப்பமடைவதில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதை உணர்ந்தான். மெக்கானிக்கிடமிருந்து காரை எடுத்து செல்லும் வழியில் மரங்கள் ஏற்றபட்ட ஒரு லாரியை கடந்த போது அந்த லாரி உறுமிய புகை அவனது காருக்குள் நிறைந்த்திருந்தது.
அந்த புகை வாசம் மறைவதற்குள், அந்த மூச்சுதிணறல் அட்ங்கும் முன் அவனது கார் விவசாய கல்லூரி வாசலில் நின்றது. பழம் தரும் மரகன்றுகள் நூறை வாங்கி காரில் எடுத்து சென்று அவனது கிராமத்தில் எல்லோருக்கும் கொடுத்தான், இதே வகையில் மாதம் நூறென இந்த வருடத்தில் ஆயிரம் கன்றுகளாவது தன் பங்கிற்கு நட்டுவிட வேண்டும் என்ற லட்சியத்துடனும், தன் "பழைய" லட்சியங்களை விட்டு விடாமலும் .