அது ஒரு தனி உலகம்- தமிழகத்தின் ஒரு முக்கிய மத்திய சிறைச்சாலை. வாரத்தில் ஒரு முறை எச். ஐ . வி நோயாளிகளை சிறையில் சென்று பார்ப்பது எனது பணி, நான் ஒரு எச். ஐ . வி க்கான மருத்துவன். என்னை யாரோ பின்னால் அழைத்த குரல் கேட்க என் எக்ஸ்பிரஸ் வேகத்தை குறைத்து நின்றேன், எங்கோ பார்த்த முகம் போலிருக்க அவரே அறிமுகமானார் இந்த சிறையின் ஆண் செவிலியர் என்று. என் மறதிக்கு மன்னிப்பு கேட்டு கொண்டிருக்க சிறை மருத்துவரும் வந்து சேர்ந்தார். என்னுடைய கிளினிக்கிற்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட காவலர் ஒருவரை அனுப்புவதாகவும் அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மச்சினன் என்றும் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர். சொன்னபடி வந்தார் அந்த காவலர் அவருக்கு தேவையான மருந்துகளை எழுதி கொடுத்தேன், கூடுதலாக அவரது மனைவியிடம் மட்டும் விசயத்தை சொல்லுவது அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் வந்தால் பக்க பலமாய் இருக்கும் என்றேன். சில நாட்களில் திரும்ப நல்ல முன்னேற்றத்துடன் வந்தார் ஆனால் மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. திரும்பவும் ஆலோசனை வழங்க அவராகவே மனைவியிடம் விசயத்தை சொல்லி விட்டார் .
விஷயம் அவரது மச்சினனான உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரிய குடும்ப மானமே பெரிதென எங்கோ அடைத்து வைத்தனர். என்னிடம் செல் போனில் தொடர்பு கொண்ட அவரது மனைவி அவரை குண படுத்த வேண்டுமெனவும் அவரது ஓரின சேர்க்கை குணம் மாற வேண்டும் என்றும் கேட்டார். அவரது வாழ் நாள் பிரச்சனையே இல்லை மற்றவர்களை போலவே வாழ்வார் ஆனால் ஓரினச்சேர்க்கை குணத்தை முழுமையாய் மற்ற முடியாது என்றேன் , அவசரமாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சில நாட்களில் என்னை தேடி இரண்டு காவலர்கள் மபிட்டியில் வந்து அவருக்கான மருந்துகளை பெற்று சென்றனர்-உயர் அதிகாரியின் கைகூலிகள். நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் மனமாற்றத்திர்க்காக வெளியூரில் வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். சில வாரங்களில் நோயாளி மோசமான நிலையில் இருப்பதாக சிறை செவிலியர் சொல்ல, காரணம் அவரது குடும்பத்தார் அவரை சிகிச்சை எடுக்க என்னிடம் அனுமதிக்காமல் அடைத்து வைத்தது அம்பலமானது. விஷயமறிந்து வீறு கொண்டு எழுந்து போராட, உதவிக்கு மற்றொரு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட காவலர் வர எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் போலீஸ் அதிகாரியை அணுகினோம். போலீஸ் அதிகாரியின் குடும்ப விசயமரிந்ததும் கை விரித்தார் நான் என்ன செய்யமுடியுமென்று. மனம் தளரவில்லை நாங்கள், செவிலியரின் உதவியுடன் அந்த நோயாளியின் வீட்டை அடைந்தோம். தனி வீடு- மனிதர் வாழும் அடையாளம் இல்லாது இருந்தது, ஒரே ஒரு கட்டில் அதன் கீழே தண்ணீர் சொம்பு மயான அமைதி,என்னை எமன் போல குடும்பத்தார் பாவித்தனர்.என் அழைப்பிற்கு திரும்பி பார்த்துவிட்டு பேச சக்தியின்று கண் சொருகினார் என்னை பிழை கொண்ட நோயாளி. குற்றுயிருடன் முனகி கிடக்கும் மனிதனை சிகிச்சைக்கு சேருங்கள் அவர் பிழைப்பது உறுதி என்றேன்,இல்லையேல் நாளை செய்தித்தாளில் இந்த விசயத்தை வெளியிடுவேன் என்றேன்.அவர்களோ குடும்பத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறோம் என்றனர்.
திடீரென நியாபகம் வந்தது என் அண்ணனது கொளிந்தியால் திருமணம், இரண்டு நாள் விடுப்பில் என் ஊர் செல்ல மறந்து போனேன் நியாய அநியாயங்களை. வாரங்கள் கழிய எங்கோ இருந்து ஒரு மருத்துவர் என்னை அழைத்து அதே நோயாளியை பற்றி விசாரித்தார், மேலும் அவர் தங்களது மருத்துவமனையில் இருந்து discharge செய்த போது நோயாளி நலமுடன் இருந்தார் என்றார். சிறை செவிலியரை செல் பேசியில் அழைக்க, நான் எடுத்த திருமண விடுப்பில் நோயாளி அவரது கஷ்டங்களிலிருந்து விடுபட்டார் என்பதே கடைசி செய்தி.
இப்படிக்கு
மானங்கெட்ட மருத்துவன்

3 comments:
Good post kutty... Try to improve Tamil sentance formation....
Really a real emotional story...but I too agree with Baskar about the sentences...All the best
உணர்வுகளை சொல்ல,உவமைகள் தேவை இல்லை.
இது சிறுகதை போட்டிக்கான கதை இல்லை,ஒரு உண்மை.
ஒரு உண்மையினை ஊருக்கு சொல்லும் முயற்சி.
Post a Comment