Wednesday, June 9, 2010

நேர்மை என்னும் எதிரி - சிறுகதை - குட்டி




புதிதாக பதவியேற்று அரசுமருத்துவ அதிகாரியாக அந்த ஊருக்குள் நுழைந்த குமாருக்கு வயது 27. அவருக்கு அவரது நண்பன் கூரிய அறிவுரை " உனக்கு கீழ் வேலை பார்க்கும் யாரையும் கண்டிக்காதே, அவர்கள் எல்லோரும் அதே ஊரில் பல வருடங்கள் பணியில் இருப்பார்கள். நீ கண்டிப்புடன் இருந்தால் உன் மீது அரசாங்கத்திற்கு மொட்ட கடுதாசி போட்டு தொல்லை கொடுப்பார்கள்". அது அறிவுரை என்பதை விட, அது அவரது அனுபவம் என்பதே சரியான வார்த்தை. நேர்மையை அதிகம் நம்பி 27 வருடங்களை கடந்த குமாருக்கு நண்பனது அனுபவம் கவலை தரவில்லை.
இந்த மருத்துவமனையில் நிறைய மாற்றங்கள் தேவை என்பது முதல் மாதத்திலேயே தெரிந்தது. மாற்றத்தின் முதல்படி வருகைபதிவேட்டை சரியாக கையாள்வது. தினமும் எல்லா அறைகளையும் சுற்றி வந்த அந்த வருகை பதிவேடு மருத்துவரின் அறைக்குள் அடைக்கலம் புகுந்தது.அத்துடன் மருத்துவ சான்றிதல்களுக்கு வாங்கப்பட்டு வந்த பணம், பிரசவத்திற்க்கு வாங்கப்படும் பணம், ஊசி மற்றும் குளுக்கோசுக்கான பணம் என எல்லாம் நிறுத்தப்பட்டது. குசு குசு என மற்ற ஊழியர்கள் பேசி கொள்வதை குமாரல் உணர முடிந்தது. இரண்டாவதாக மருத்துவமனைக்கு தண்ணீர் விடுவதற்கு பணம் கேட்கும் அந்த பஞ்சாயத்து ஊழியரை ஊர் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க, அதுவும் சரி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்கள் எல்லாம் சரியாக நடந்தது. மூன்றாவது வாரம் மேலதிகாரியின் திடீர் சுற்றுப்பார்வை அந்த மருத்துவமனையில். எல்லாம் சரியாக இயங்கியும் பல தவறுகளை சுட்டி காட்டிய மேலதிகாரி, குமாரை அடுத்த நாள் விளக்கமளிக்க வேண்டினார்.
மேலதிகாரியின் அலுவலகத்தில் குமாரின் நேர்மை விலைபேசப்பட்டது, குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. அடுத்த நாள் முதல் முன்னர் இலவசமாக வாங்கப்பட்டு வந்த மருத்துவச்சான்றிதல்களுக்கு நூறு ரூபாயாக விலை நிர்ணயக்கப்பட்டிருந்தது.

No comments: